64Mp உடன் குவாட் கேமரா கொண்ட Realme XT இன்று முதல் விற்பனை.

64Mp  உடன் குவாட் கேமரா கொண்ட Realme XT இன்று முதல் விற்பனை.
HIGHLIGHTS

ரியல்மி XT ஸ்மார்ட்போன் பியல் வைட் மற்றும் பியல் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம். 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 எ

ரியல்மி பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி XT ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் REALME XT இன்று பிளிப்கார்ட் மற்றும் Realme யில் அதிகாரபூர்வ வெப்சைட்டிலும் இன்று முதல் விற்பனை.

விலை மற்றும் விற்பனை.
ரியல்மி XT ஸ்மார்ட்போன் பியல் வைட் மற்றும் பியல் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம். 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி XT விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைத்தளங்களில் செப்டம்பர் 16 ஆம் தேதி ஆன  இன்று பிளிப்கார்ட் கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது இதன் ஆபர்  பற்றி பேசினால்,1,417ருபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கும் வசதி இருக்கிறது.இதனுடன் HDFC கார்ட் மூலம் வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது..

ரியல்மி XT சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0
– 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.72″ சாம்சங் GW1 சென்சார், 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
– 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
– 2 எம்.பி. கேமரா, f/2.4, 1.75μm பிக்சல்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– சூப்பர் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க ரியல்மி XT ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய கேமரா கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரியல்மி XT பெற்றிருக்கிறது.

பிரைமரி கேமராவுடன் 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. சீன் டிடெக்‌ஷன், க்ரோம் பூஸ்ட், சூப்பர் நைட்ஸ்கேப், எக்ஸ்பெர்ட் மோட் போன்றவை வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் வீடியோக்களுக்கு EIS வசதி வழங்கப்பட்டுள்ளது. 

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி XT மாடல் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, சூப்பர் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் VOOC 3.0 சார்ஜரும் வழங்கப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo