REALME XT INDIA LAUNCH: நீங்களும் இந்த நிகழ்வை நேரடியாக காணலாம்.LIVESTREAM.
Realme XT இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டு நிகழ்வை மதியம் 12:30 மணிக்கு நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், இந்த போனின் பல சிறப்பு அம்சங்களையும் நிறுவனம் லீக் செய்துள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் இந்த அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பு, நிறுவனம் இந்த போனை பற்றி நிறைய கூறியுள்ளது.
SurveyRealme XT launch event பயனர்களுக்கு இங்கு லைவாக காண்பிக்க இருக்கிறது.பயனர்கள் இந்த வெளியீட்டை யூடியூபிலும் பார்க்கலாம். அதே நேரத்தில், Realme XT யின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த போன் Pearl Blue மற்றும் Pearl White வண்ணங்களில் வரலாம்.
Realme XT சிறப்பம்சம்.
ரியல்மி XT ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 8ஜிபி அளவு வரையிலான ரேம், 128ஜிபி வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் அமோல்ட் ஸ்க்ரீனை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
இதோடு, 4,000Mah பேட்டரி, 20டபுள்யூ, VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-சி சார்ஜர் போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
இந்த ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் சீனாவிலும் அறிமுகமாகாத நிலையில், ரியல்மி எக்ஸ்டியின் விலை மர்மாகவே உள்ளது.
64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 4 பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், சீனாவில் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட விலையிலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
