Realme X அடுத்து 256 GB கொண்ட ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும்.

Realme X அடுத்து  256 GB  கொண்ட  ஸ்மார்ட்போனை  விரைவில் அறிமுகம் செய்யும்.
HIGHLIGHTS

இந்தியாவில் Realme X 4 ஜிபி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் என இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Realme X  ஸ்மார்ட்போனின் அடுத்து 256GB ஸ்டோரேஜ் உடன் ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA  வெப்சைட்டில் லீக் ஆகியுள்ளது.முதற்கட்டமாக புதிய வேரியண்ட் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.விரைவில் இந்தியாவில் 256GB கொண்ட ஸ்டோரேஜை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும்.

இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. சீனாவில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இது கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் இது அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் Realme X 4 ஜிபி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் என இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 16,999 மற்றும் ரூ. 19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் Realme X  256 ஜி.பி. வேரியண்ட் TENAA வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை Realme X  ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் HD  பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும்.AI  அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் மாடலில் 3765. Mah பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.  புதிய ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிஷனும் கிடைக்கிறது.இது ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo