Realme மீண்டும் அடுத்த சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யும்.

Realme  மீண்டும் அடுத்த சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யும்.
HIGHLIGHTS

ரியல்மி பிராண்டு புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

ரியல்மி பிராண்டின் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இத்துடன் ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போனினை 64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது. 

புதிய டீசரின் படி புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சீரிஸ் எந்த பெயரில் அறிமுகமாகும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி பிராண்டு புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. இதனை உணர்த்தும் வகையில் ரியல்மி பிராண்டு மூத்த விளம்பர அதிகாரி சு கி டீசர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

முன்னதாக குவால்காமின் அதிநவீன சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரியல்மி பிராண்டு அறிமுகம் செய்தது. இதுதவிர பிளாக் ஷார்க் மற்றும் நுபியா பிராண்டு ஏற்கனவே ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo