Realme Narzo 10 மற்றும் Narzo 10A இந்தியாவில் ரூ. 8499 விலையில் அறிமுகமானது.

Realme Narzo 10 மற்றும் Narzo 10A  இந்தியாவில் ரூ. 8499 விலையில் அறிமுகமானது.
HIGHLIGHTS

நார்சோ 10ஏ விற்பனை மே 22 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி பிராண்டின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி நார்சோ 10 மற்றும் நார்சோ 10ஏ என இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன. ரியல்மி நார்சோ 10 மாடலில் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியும், ரியல்மி 10ஏ மாடலில் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 10 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது. நார்சோ 10 மாடலில் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, நார்சோ 10ஏ மாடலில் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 10 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், தட் வைட், தட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

நார்சோ 10ஏ மாடல் ஹீலியோ ஜி70 பிராசஸர் சோ வைட், மற்றும் சோ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 10 சார்ந்து இயங்கும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க நார்சோ 10 மாடலில் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

நார்சோ 10ஏ மாடலில் 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு சாதனங்களிலும் 1080 பிக்சல் வீடியோக்களை படமாக்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 10 விலை ரூ. 11,999 என்றும், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன் விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நார்சோ 10 ஸ்மார்ட்போன் விற்பனை மே 18 ஆம் தேதியும், நார்சோ 10ஏ விற்பனை மே 22 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. நார்சோ 10ஏ மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஒடிஜி ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 2 நானோ சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 5, கைரோமீட்டர் மற்றும் இதர சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo