Realme GT அறிமுக தகவல் வெளியானது, இந்த அம்சங்களுடன் அறிமுகமாகும்

HIGHLIGHTS

Realme GT 2 சீரிஸின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது ரியல்மி நிறுவனத்தின் முதல் பிரீமியம் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்

Realme GT 2 இதுவரை ஸ்மார்ட்போன் துறையில் மிகவும் பிரத்யேகமான போனாக இருக்கும்

Realme GT 2 சீரிஸின்  வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Realme GT 2 தொடரின் வெளியீடு ஜனவரி 4 ஆம் தேதி சீனாவில் நடைபெறும். Realme GT 2 ஆனது Snapdragon 8 Gen 1 செயலியுடன் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த வார தொடக்கத்தில், Realme GT 2 இதுவரை ஸ்மார்ட்போன் துறையில் மிகவும் பிரத்யேகமான போனாக இருக்கும் என்று Realme கூறியிருந்தது.

ரியல்மி நிறுவனம் ஒருவழியாக தனது ஜி.டி.2 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. இது ரியல்மி நிறுவனத்தின் முதல் பிரீமியம் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இத்துடன் 150 டிகிரி அல்ட்ரா-வைடு கேமரா, ஃபிஷ்-ஐ மோட், ஆண்டெனா அரே மேட்ரிக்ஸ் சிஸ்டம், உலகின் முதல் அல்ட்ரா-வைடு பேண்ட் ஆண்டெனா ஸ்விட்சிங் தொழில்நுட்பம், வைபை என்ஹான்சர், 360 டிகிரி என்.எப்.சி. தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ஜி.டி.2 ப்ரோ மாடலில் மூன்று புதிய அம்சங்கள் முதல் முறையாக ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பேப்பர் டெக் மாஸ்டர் டிசைன் கொண்டு உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த போனில் உலகிலேயே முதல்முறையாக பயோ-சார்ந்த பேக் கவர் வழங்கப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ரியல்மி ஜி.டி. 2 ப்ரோ மாடலில் 6.8 இன்ச் 120 ஹெர்ட்ஸ் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. ஸ்கிரீன், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் விலை 800 டாலர்களுக்கும் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி ஸ்கை லி ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :