Realme C2 மற்றும் C3 யின் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Realme C2 மற்றும்  C3 யின் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

Realme C2 மற்றும் Realme C3 மாடல்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது

இதன் 4 ஜிபி + 6 ஜிபி விலை ரூ. 8499 இல் இருந்து தற்சமயம் ரூ. 8999 ஆக மாறியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே விலை உயர்த்தி ஒரு மாதம் மட்டுமே நிறைவுற்று இருக்கும் நிலையில், Realme C2 மற்றும் Realme C3 மாடல்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
அதன்படி ரியல்மி சி2 மற்றும் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ. 500 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல்மி சி2 2ஜிபி + 32 ஜிபி ரூ. 6499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் இது ரூ. 6999 ஆக மாறியிருக்கிறது. ரியல்மி சி2 2 ஜிபி + 16 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி மாடல்களின் விலை தற்சமயம் மாற்றப்படவில்லை.

இதேபோன்று ரியல்மி சி3 3 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை முந்தைய ரூ. 7499 இல் இருந்து தற்சமயம் ரூ. 7999 என மாறியிருக்கிறது. இதன் 4 ஜிபி + 6 ஜிபி விலை ரூ. 8499 இல் இருந்து தற்சமயம் ரூ. 8999 ஆக மாறியுள்ளது. 

Realme C2 மற்றும்Realme C3 உயர்த்தப்பட்ட புதிய விலை விவரங்கள் ரியல்மி வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் விரைவில் விலை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo