Realme பட்ஸ் 2 ஹெட்போன் இந்தியாவில் ரூ. 399 விலையில் அறிமுகம்.

Realme பட்ஸ் 2 ஹெட்போன் இந்தியாவில் ரூ. 399 விலையில் அறிமுகம்.

ரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரியல்மி பட்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமாகி இருக்கும் புதிய ஹெட்போன் ரியல்மி பட்ஸ் 2 என அழைக்கப்படுகிறது. இதில் மேம்பட்ட சவுண்ட் மற்றும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இத்துடன் கேபிள் ஆர்கனைசர், பில்ட்-இன் மேக்னெட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன் கேபிள் அடிக்கடி சிக்கிக் கொள்ளாது. அழகாகவும், அதிக உறுதித்தன்மை கொண்ட விலை குறைந்த ஹெட்போனாக ரியல்மி பட்ஸ் 2 இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.

புதிய ரியல்மி பட்ஸ் 2 மாடலில் 11.2 எம்.எம். பாஸ் பூஸ்ட் டிரைவர், மல்டி-லேயர் கம்போசிட் டையகிராம் மற்றும் ஜப்பான் டைகோ வாய்ஸ் காயில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 3.5mm  பிளக் கொண்டிருக்கும் புதிய ஹெட்போன் 3.5 mm  ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் பெரும்பாலான மொபைல் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

ரியல்மி பட்ஸ் 2 ஹெட்போனுடன் ரியல்மி ஐகானிக் கேஸ் மற்றும் ரியல்மி டோட் பேக் உள்ளிட்டவற்றை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி ஐகானிக் கேஸ் விலை ரூ. 399 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 21 ஆம் தேதி துவங்குகிறது. ரியல்மி பட்ஸ் 2 விலை ரூ. 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி டோட் பேக் விலை ரூ. 1,199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 4 ஆம் தேதி துவங்குகிறது. இதுதவிர ரியல்மி பிராண்டு 64 எம்.பி. கேமரா கொண்ட ரியல்மி XT ஸ்மார்ட்போனினை செப்டம்பரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo