Realme 7 சீரிஸ் இந்தியாவில் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்.

Realme  7 சீரிஸ் இந்தியாவில்  செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்.
HIGHLIGHTS

ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ரியல்மி 7 சீரிஸ் மாடல்களுக்கு பிளைன்ட் ஆர்டர் விற்பனை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ. 1000 செலுத்தி புதிய ஸ்மார்ட்போனை நிச்சயம் வாங்கிக் கொள்ளும் உறுதியை பெற முடியும்.

டீசர்களை தொடர்ந்து ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. டீசரின்படி ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 65 வாட் சூப்பர் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. 

ரியல்மி 7 சீரிஸ் மாடல்களுக்கு பிளைன்ட் ஆர்டர் விற்பனை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பயனர்கள் ரூ. 1000 செலுத்தி புதிய ஸ்மார்ட்போனை நிச்சயம் வாங்கிக் கொள்ளும் உறுதியை பெற முடியும். 

பின் ஸ்மார்ட்போனிற்கான மீதித் தொகையை செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தலாம். இந்த விற்பனையில் கலந்து கொள்வோர் ரியல்மி ஏஐஒடி சாதனங்களை வாங்கும் போது ரூ. 100 தள்ளுபடி பெற முடியும். ரியல்மி 7 ப்ரோ வாங்குவோருக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரை தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 2-ஆம் தலைமுறை குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட இருப்பதையும் ரியல்மி உறுதியாக தெரிவித்து இருக்கிறது. ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிகவேகமாக சார்ஜ் ஆகும் மாடல்களில் ஒன்றாக இருக்கும். இது பேட்டரியை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 32 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo