Realme யின் மேலும் புதிய ஸ்மார்ட்போன் 5000Mah பேட்டரி கொண்டிருக்கும்.

Realme யின் மேலும் புதிய ஸ்மார்ட்போன் 5000Mah பேட்டரி கொண்டிருக்கும்.

ரியல்மி பிராண்டின் புதிய Realme 6I  ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. குவாட் கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக மியான்மரில் அறிமுகம் செய்யப்படும் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், டூயல் சிம் வசதி, வைபை, ப்ளூடூத் 5.0 போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் இதே ஸ்மார்ட்போன் RMX2040 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்பட்டது. மேலும் இதில் நாட்ச் டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர 18 வாட் சார்ஜர், 5000Mah . பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

REALME 6I விலை 

Realme 6i இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜில் வருகிறது, 3 ஜிபி + 64 ஜிபி விலை எம்எம்கே 249,900 (சுமார் ரூ .13,000), 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை எம்எம்கே 299,900 (சுமார் ரூ .15,600). ரியல்மே 6i மார்ச் 18 முதல் மார்ச் 26 வரை மியான்மரில் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்படும், மேலும் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து முன்பதிவு செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo