5,000 MAH பேட்டரி மற்றும் குவாட் கேமரா உடன் அறிமுகமானது REALME 5I ஸ்மார்ட்போன் .

5,000 MAH பேட்டரி மற்றும் குவாட் கேமரா உடன் அறிமுகமானது REALME 5I ஸ்மார்ட்போன் .
HIGHLIGHTS

புதிய ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் கலர் ஒ.எஸ். 6.1 வழங்கப்பட்டுள்ளது.

Realme  கடந்த ஆண்டு 2019 யில் பல  ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது, சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் இந்த ஆண்டின் முதல் ஸ்மார்ட்போனான Realme 5i  அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாரம் வியட்நாமிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

REALME 5Iசிறப்பம்சங்கள்:

சிறப்பம்சங்கள் ரியல்மி 5 ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும், புதிய ஸ்மார்ட்போனில் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் கலர் ஒ.எஸ். 6.1 வழங்கப்பட்டுள்ளது. 

– 6.52 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ்
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஒ.எஸ். 6.1 ரியல்மி எடிஷன் சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.25
– 2 எம்.பி. டெப்த் சென்சார், 
– 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யு.எஸ்.பி. 
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

விலை மற்றும் விற்பனை 
ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் அக்வா புளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஜனவரி 15-ம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo