RBI NEW rule: டிஜிட்டல் பேமன்ட் மிக பெரிய மாற்றம் நாளை முதல் ஆரம்பம் மாற்றத்திற்கு காரணம் என்ன?

HIGHLIGHTS

ரிசர்வ் பேங்க் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது

இந்த புதிய விதி நாளை ஏப்ரல் 1 முதல் ஆரம்பமாகிறது

செக்யூரிட்டியை பலப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய நடவடிக்கை கொண்டு வந்துள்ளது

RBI NEW rule: டிஜிட்டல் பேமன்ட் மிக பெரிய மாற்றம் நாளை முதல் ஆரம்பம் மாற்றத்திற்கு காரணம் என்ன?

RBI யின் புதிய ரூல் அதன் டிஜிட்டல் முறையில் ரிசர்வ் பேங்க் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது, இந்த புதிய விதி நாளை ஏப்ரல் 1 முதல் ஆரம்பமாகிறது கூடுதல் செக்யூரிட்டியை பலப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய நடவடிக்கை கொண்டு வந்துள்ளது, ஃபிஷிங் மற்றும் சிம்-ஸ்வாப் போன்ற இணையவழி மோசடிகளைத் தடுப்பதும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதுமே இதன் நோக்கமாகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த புதிய விதி எப்பொழுது ஆரம்பமாகிறது மற்றும் என்ன மாற்றங்கள் ?

இந்த RBI யின் புதிய ரூல் ஏப்ரல் 1 2026, முதல் இந்த புதிய மாற்றங்கள் ஏற்ப்படும் அதில் என்ன என்ன என்பதை பார்த்தால்..

  • இனிமேல், அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் (UPI, கார்ட் , வாலட்) இரு two-factor authentication (2FA) கட்டாயமாக்கப்படும்.
  • பரிவர்த்தனைகளுக்கு, SMS மூலம் வெறுமனே OTP அனுப்புவது இனி போதுமானதாக இருக்காது.
  • ட்ரேன்ஸ்செக்ஷன் அங்கீகரிக்க, கூடுதல் பாதுகாப்பு அடுக்கு தேவைப்படும்.
  • புதிய விதிகளின்படி, two-factor authentication (2FA) குறைந்தபட்சம் ஒன்று, அந்தப் பரிவர்த்தனைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாறும் தன்மையுடையதாக இருக்க வேண்டும்.
  • வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் நிறுவனங்கள், பயோமெட்ரிக்ஸ், பின்/கடவுச்சொல், வங்கிச் செயலி டோக்கன் போன்ற சரிபார்ப்பிற்கான பல வழிமுறைகளைக் கொண்டிருக்கும்.
  • பாதுகாப்பு அமைப்பில் ஏற்படும் ஏதேனும் தவறினால் வாடிக்கையாளருக்கு இழப்பு ஏற்பட்டால், அதற்கு பேங்க் மற்றும் அது தொடர்பான நிறுவனங்களே பொறுப்பாகும்.

இதையும் படிங்க சீனா CCTV நிறுவனங்களுக்கு அரசு வைத்தது மிக பெரிய முற்று புள்ளி காரணம் என்ன

RBI இந்த புதிய ரூல் கொண்டு வர காரணம் என்ன

  • புதிய விதிகளின் காரணமாக, உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஒருவருக்குக் கிடைத்தாலும், அவர்களால் பணம் செலுத்த முடியாது. ஏனெனில், அவர்களிடம் உங்கள் பிங்கர்ப்ரின்ட் அல்லது பிற பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. முன்பு, நீங்கள் ஒரு கடைக்குச் சென்று அதை ஸ்கேன் செய்து எளிதாகப் பணம் செலுத்த முடிந்தது. ஆனால் இப்போது, ​​PIN நம்பரை உள்ளிடுவதோடு, உங்கள் பிங்கர்ப்ரின்ட், டிஜிட்டல் கொட போன்றவையும் கேட்கப்படலாம்.
  • இது சிம் கார்டு மாற்றத்திலிருந்தும் பாதுகாக்கும். ஹேக்கர்கள் பெரும்பாலும் உங்கள் பெயரில் இரண்டாவது சிம் கார்டைப் பெற்றுவிடுவார்கள், ஆனால் வேறொருவரின் பெயரில் சிம் கார்டு வைத்திருப்பது மட்டும் போதுமானதாக இருக்காது.
  • இனிமேல், யாராவது உங்கள் தொலைபேசியிலிருந்து அதிக தொகைக்கு பரிவர்த்தனை செய்ய முயற்சித்தால், கணினி அமைப்பு தானாகவே கூடுதல் சரிபார்ப்பை வழங்கும்.

இண்டர்நேஷன் பணம் பரிவர்த்தனைக்கும் அதே மாற்றம்

RBI இந்த புதிய விதியானது நாடு விட்டு நாடு இந்த நடவடிக்கை பொருந்தும், இந்த புதிய விதியின் படி இண்டர்நேஷனல் கார்ட் பேமன்ட் நீடிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விதியானது அக்டோபர் 2026 நடைமுறைக்கு வரும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo