REALME 5 PRO குவாட் கேமரா செட்டபின் 48-MP சென்சார் உடன் ஆகஸ்ட் 20 அறிமுகமாகும்.

REALME 5 PRO குவாட் கேமரா செட்டபின்  48-MP சென்சார்  உடன் ஆகஸ்ட் 20 அறிமுகமாகும்.
HIGHLIGHTS

ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

இந்தியாவில் ரியல்மி பிராண்டு தனது ரியல்மி 5 ப்ரோ மற்றும் ரியல்மி 5 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்டிருக்கும் என ரியல்மி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இவற்றில் பிரைமரி சென்சாருடன், அல்ட்ரா-வைடு சென்சார், சூப்பர் மேக்ரோ சென்சார், டெப்த் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

ரியல்மி 5 பற்றி ப்ளிப்கார்ட் தளத்தில் சிறிய பதிவு வெளியானது. எனினும், ரியல்மி 5 பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ப்ளிப்கார்ட் பதிவுகளின் படி ரியல்மி 5 ப்ரோ இரண்டாவது சென்சார் அல்ட்ரா வைடு சென்சார் கொண்டிருக்கும் என தெரிவித்தது. இத்துடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் கிளாஸி பேக் பேனல், பின்புறம் பின்புறம் சென்சார் வழங்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் அறிவிப்பை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ரியல்மி 5 ப்ரோ பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில் ரியல்மி 5 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 48 எம்.பி. கேமராவுடன் நான்கு சென்சார்கள் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo