நான்கு கேமராக்களுடன் REALME 5 மற்றும் REALME 5 PRO, RS 9,999 விலையில் அறிமுகம்.

நான்கு  கேமராக்களுடன் REALME 5 மற்றும் REALME 5 PRO, RS 9,999 விலையில் அறிமுகம்.
HIGHLIGHTS

Realme 5 மற்றும் Realme 5 புரோ மூன்று வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

Realme இன்று தனது இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களான Realme 5 மற்றும் Realme 5 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இரண்டு போன்களிலும் குவாட் கேமரா உள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, நிறுவனம் Realme X மற்றும் Realme 3 i ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. Realme 5 மற்றும் Realme 5 புரோ மூன்று வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, ரியல்மே 5 இன் முதல் விற்பனை ஆகஸ்ட் 27 ஆம் தேதியும், புரோ வேரியண்ட் செப்டம்பர் 4 ஆம் தேதியும் தொடங்கும்.

REALME 5 மற்றும் REALME 5 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்களிலும் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எட்ஜ்-டு-எட்ஜ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளன.

REALME 5  சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் மினி-டிராப் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 ரியல்மி எடிஷன்
– 12 எம்.பி. சோனி IMX386 சென்சார், f/1.8, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 8 எம்.பி. 118° அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.25
– 2 எம்.பி. டெப்த் சென்சார், 1.75μm பிக்சல், f/2.4
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

Realme 5 இன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால், இந்த சாதனம் 6.5 இன்ச் மினி-டிராப் முழு ஸ்க்ரீன்  டிஸ்பிலேவை கொண்டுள்ளது, இது ஸ்க்ரீனில் இருந்து பாடி டு ரேஷியோ 89% ஆகும். ஸ்மார்ட்போனுக்கு ஒரு கிரிஸ்டல் டிசைன் வழங்கப்பட்டுள்ளது மற்றும் போன் கிரிஸ்டல் நீலம் மற்றும் கிரிஸ்டல் ஊதா வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Realme5 ப்ரோவை ஒத்த குவாட் கேமரா அமைப்பையும் Realme5 கொண்டுள்ளது. இது 240fps ஸ்லோ-மோ வீடியோ, 190 டிகிரி பார்வையை வழங்குகிறது. ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-அங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மைக்ரோ லென்ஸ் மற்றும் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

REALME 5 PRO  சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD . பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 712 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 8 ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0
– 48 எம்.பி. 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 8 எம்.பி. 119° அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.25
– 2 எம்.பி. டெப்த் சென்சார், 1.75μm பிக்சல், f/2.4
– 2 எம்.பி. டெப்த் சென்சார், 1.75μm பிக்சல், f/2.4
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4035Mah பேட்டரி
– VOOC  3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

Realme 5 Pro  வில் 6.3 இன்ச் யின் பெரிய டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தில் நிறத்தின் வகைகளை பற்றி பேசினால்,ஸ்டால் கிரீன் மற்றும் ஸ்பார்க்கிங் ப்ளூ ஆகியவை விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

விலை மற்றும் விற்பனை 
ரியல்மி 5 ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் புளு மற்றும் க்ரிஸ்டல் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 9,999 விலையிலும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 10,999 விலையிலும், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 11,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்குகிறது.

ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்பார்க்லிங் புளு மற்றும் க்ரிஸ்டல் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ. 13,999, 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999, டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999 விலையில் கிடைக்கிறது. ஆஃப்லைன் சந்தையில் இதன் விற்பனை செப்டம்பர் 4 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo