Realme 3 அறிமுகத்திற்கு முன்பே அதன் அம்சம் வெளி வந்துள்ளது 4230mAh மற்றும் மீடியாடேக் ஹீலியோ P70 கொண்டுள்ளது

HIGHLIGHTS

ஒப்போவின் சப் பிராண்டு ரியல்மி தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்க்கு முன்னதாகவே இதன் ஒரு சில சிறப்பமசங்கள் வெளிவந்துள்ளது

Realme 3 அறிமுகத்திற்கு  முன்பே  அதன் அம்சம்  வெளி வந்துள்ளது 4230mAh  மற்றும் மீடியாடேக் ஹீலியோ P70  கொண்டுள்ளது

ஒப்போவின் சப் பிராண்டு ரியல்மி தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்க்கு முன்னதாகவே இதன் ஒரு சில  சிறப்பமசங்கள் வெளிவந்துள்ளது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக அறிமுகமாகிறது. ரியல்மி 3 ஸ்மார்ட்போன் டியூ-டிராப் நாட்ச் வடிவமைப்பு, மீடியாடெக் ஹீலியோ P70 மற்றும் 4230 Mah பேட்டரி கொண்டிருக்கிறது. மார்ச் 4 இல் புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதை ரியல்மி ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்மார்ட்போனின் டீசர்களை அந்நிறுவனம் தனது வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தது. அதன்படி ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது. ரியல்மியின் முந்தைய ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா செட்டப் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருந்தது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ரியல்மி 1 மற்றும் ரியல்மி 2 மாடல்களிலும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போனுடன் கவர்ச்சிகரமான கேஸ் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஏற்கனவே ரியல்மி வெளியிட்டிருந்த ஸ்மார்ட்போனின் அழைப்பிதழில் “Power Your Style” எனும் டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், ஏ.ஐ. என்ஜின், ஜி.பி.யு. அக்செல்லரேஷன் மற்றும் கேமிங் மோட் உள்ளிட்டவை வழங்கப்படும் என ரியல்மி பிராண்டு தலைமை செயல் அதிகாரி உறுதிப்படுத்தி இருந்தார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo