இன்டர்நெட்டில் லீக் ஆன ரேசர்போன் சுவாரசிய பல தகவல்கள்…!

HIGHLIGHTS

ரேசர்போன் 2 மாடலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. முந்தைய ரேசர் ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்டர்நெட்டில் லீக் ஆன  ரேசர்போன் சுவாரசிய பல தகவல்கள்…!

இந்தியாவில் ரேசர்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் ரேசர் போன் 2 வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

https://static.digit.in/default/1418a3b0eee35568117e9c71eee966248cc8f33f.jpeg

சீனாவின் அன்டுடு பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ள விவரங்களில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் உறுதியாகியுள்ளது. அதன்படி ரேசர்போன் 2 மாடலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. முந்தைய ரேசர் ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://static.digit.in/default/488f87d7a5b6c319c26b71e6e62da673e197bfd2.jpeg

இத்துடன் 5.7 இன்ச் QHD ஷார்ப் IGZO ஸ்கிரீன், குவால்காம் க்யூ-சின்க் வசதி வழங்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ரேசர்போன் 2 அன்டுடு தளத்தில் 2,83,397 புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, கேமரா மற்றும் பேட்டரி சார்ந்த தகவல்கள் அறியப்படவில்லை.

https://static.digit.in/default/ae74c85f16e75a4e6af7d579b3109b76850e2a92.jpeg

முந்தைய ரேசர் போன் போன்று புதிய ரேசர் போன் 2 மாடலும் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மற்ற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ரோக் போன், சியோமி பிளாக் ஷார்க் மற்றும் இதர மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile