IQOO 5G ஸ்மார்ட்போனின் டீசர் இந்தியாவில் வெளியானது

IQOO  5G  ஸ்மார்ட்போனின் டீசர் இந்தியாவில்  வெளியானது

IQoo பிராண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க இருப்பதை சமீபத்தில் அறிவித்தது. விவோ நிறுவனத்தின் தனி பிராண்டாக ஐகூ சீனாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டீசருடன் புதிய ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்பதையும் தெரிவித்து இருக்கிறது. புதிய டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு வீடியோவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி புதிய ஐகூ ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனாவை தொடர்ந்து இந்திய சந்தையில் களமிறங்க இருக்கும் ஐகூ இங்கு தனது முதல் ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. ஐகூ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சமூக வலைதளம் மட்டுமின்றி ஐகூ பிராண்டு தனியே வலைதளம் ஒன்றை துவங்கி புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை அதில் பதிவேற்றம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile