64MP + 8MP + 2MP + 2MP பின் கேமரா மற்றும் 20MP + 2MP முன் கேமரா கொண்ட Poco X2 பிளிப்கார்டில் இன்று விற்பனை

64MP + 8MP + 2MP + 2MP பின் கேமரா மற்றும் 20MP + 2MP முன் கேமரா கொண்ட Poco X2 பிளிப்கார்டில்  இன்று  விற்பனை

போக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மர்ட்போன் சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே30 4ஜி ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். மேலும் பிளிப்கார்டில் இன்று இந்த ஸ்மார்ட்போன் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் ஆபர் 

போக்கோ X 2 ஸ்மார்ட்போன் அட்லான்டிஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள் மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இதன் ஆபர் பற்றி பேசினால், நீங்கள் இதை 1,334ரூபாய் கொடுத்து No cost EMI யில் வாங்கலாம்.இதனுடன் நீங்கள் ICICI பேங்க் கார்ட் கொண்டு வாங்கினால் 1000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.இதனுடன்  Axis Bank கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

போக்கோ x2 சிறப்பம்சங்கள்:

– 6.67- இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 எல்.சி.டி. ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
– 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 64 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm, f/1.89
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 1.12μm, f/2.2
– 2 எம்.பி. டெப்த் சென்சார்
– 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm, f/2.4, 4K 30fps, 960 fps at 720p
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, 1.75μm
– பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ-வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo