Poco வின் பட்ஜெட் போன் இதுவரை 10 லட்ச யூனிட் விற்று சாதனை.

Updated on 05-Jul-2022
HIGHLIGHTS

Poco வின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் Poco C31 மிகப்பெரிய விற்பனையில் உள்ளது

இந்த ஸ்மார்ட்போன் விற்பனையில் புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது

இந்த போன் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது

Poco வின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் Poco C31 மிகப்பெரிய விற்பனையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையில் புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஆன்லைன் தளமான பிளிப்கார்ட் மூலம் Poco C31 ஸ்மார்ட்போனின் 10 லட்சத்திற்கு அதிகமான விற்பனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த போன் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499 முதல் தொடங்கும்.

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா என எண்ணற்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது.

பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி இத்துடன் 10 வாட் சார்ஜிங் ஆகியவையும் இதில் வழங்கப்பட்டு இருந்தன. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்தது.

ஷேடோ கிரே மற்றும் ராயல் புளூ ஆகிய நிறங்களில் வந்த போக்கோ சி31 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 8,499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ. 7999 மற்றும் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இதன்காரணமாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனை மளமளவென உயர்ந்தது. தற்போது இந்தியாவில் போக்கோ சி31 ஸ்மார்ட்போன் 10 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :