அடுத்த Poco C3 ஸ்மார்ட்போன் இந்திய வெளியிட்டு தேதி அறிமுகம்.

HIGHLIGHTS

Poco C3 ஸ்மார்ட்போன் அக்டோபர் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது

டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்டிருக்கும்

இது கேம் சேன்ஜராக இருக்கும் என போக்கோ டீசர்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

போக்கோ பிராண்டின் புதிய Poco C3 ஸ்மார்ட்போன் அக்டோபர் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

தற்போதைய டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இது கேம் சேன்ஜராக இருக்கும் என போக்கோ டீசர்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் LCD டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படலாம்.

இத்துடன் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய Poco C3 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களின் படி கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் Poco C3 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :