Nothing யின் புதிய ப்ரீமியம் Headphone 1 Pro அறிமுகம் AirPods Max-க்கு டஃப் கொடுக்கும்

HIGHLIGHTS

Nothing அதன் புதிய ப்ரீமியம் ஹெட்செட் Nothing Headphone (1) Pro அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஹெட்செட்டில் ANC,திருப்பில் டிரைவர் போன்ற அம்சம் வழங்கப்படுகிறது

இந்த ஹெட்போனில் இருக்கும் விலை அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

Nothing அதன் புதிய ப்ரீமியம் ஹெட்செட் Nothing Headphone (1) Pro அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடன் இந்த ஹெட்செட்டில் ANC,திருப்பில் டிரைவர் போன்ற அம்சம் வழங்கப்படுகிறது மேலும் இது மிகவும் ப்ரீமியம் மாடலான AirPods Max உடன் போட்டி போடும் வகையில் இருக்கிறது மேலும் இந்த ஹெட்போனில் இருக்கும் விலை அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

Nothing Headphone 1 Pro சிறப்பம்சம்.

Nothing Headphone 1 Pro யில் மூன்று டிரைவர் ஆடியோ சிஸ்டம் வழங்குகிறது, இதில் 40mm டைனமிக் டிரைவர்ஸ், precision dynamic driver மற்றும் xMEMS driver வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் மைக்ரோபோன் மற்றும் நோய்ஸ் கேன்சிலேஷன் வசதியும் வழங்கப்படுகிறது.

இந்த ஹெட்ஃபோன்கள் 46dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் டைனமிக் ஸ்பேஷியல் ஆடியோவை ஆதரிக்கின்றன. ஆடியோ ஆதரவில் LDAC, AAC, SBC மற்றும் LC3 கோடெக்குகள் அடங்கும்.

மேலும், இதில் புளூடூத் 6.1, கூகுள் ஃபாஸ்ட் பேர், மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட் பேர் மற்றும் இரண்டு சாதன இணைப்பு வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஹெட்ஃபோன்கள் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP52 தரமதிப்பீட்டைக் கொண்டுள்ளன.

பேட்டரி ஆயுள் மற்றும் சார்ஜிங்

ஹெட்ஃபோன் (1) ப்ரோ 1,060mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ANC இயக்கப்பட்ட நிலையில் 30 மணிநேரம் வரையிலும், ANC அணைக்கப்பட்ட நிலையில் 68 மணிநேரம் வரையிலும் பிளேபேக் கிடைக்கும்.

இதையும் படிங்க Noise Homestage soundbar அறிமுகம் 700W சவுண்ட் அவுட்புட்டுடன் Dolby Atmos சப்போர்ட் இருக்கும்

Nothing Headphone 1 Pro விலை தகவல்

Nothing Headphone (1) Pro யின் இந்திய விற்பனை பற்றி உறுதி செய்யவில்லை இருப்பினும் இதன் விலை பற்றி பேசினால் உலகளவில் இதன் விலை $399 அது இந்திய விலை படி ரூ,35,000 ஆகும், இது கிட்டத்தட்ட Apple’s AirPods Max 2,விலையை ஈடு கொடுக்கும் வகையில் இருக்கிறது அதன் விலை இந்தியாவில் ரூ,74,900 ஆகும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :