Philips PH1 அசத்தலான பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்.

HIGHLIGHTS

பிரபல எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான பிலிப்ஸ் தனது புதிய ஸ்மார்ட்போனான Philips PH1ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் குவாட் கோர் செயலியுடன் பேக் செய்துள்ளது

இதில் பெரிய பேட்டரி கிடைக்கிறது

பிரபல எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான பிலிப்ஸ் தனது புதிய ஸ்மார்ட்போனான Philips PH1ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் குவாட் கோர் செயலியுடன் பேக் செய்துள்ளது, இதில் பெரிய பேட்டரி கிடைக்கிறது. இந்த மலிவு விலை அல்லது தொடக்க நிலை ஸ்மார்ட்போனின் விலை எவ்வளவு மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் என்ன, இது பற்றிய விரிவான தகவல்களை இப்போது உங்களுக்கு வழங்குவோம்.

Philips PH1 Specifications

இந்த Philips Mobile ஆனது 6.5-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே மற்றும் 720 x 1600 பிக்சல்கள் ரெஸலுசன் மற்றும் 18: 9 என்ற ரேஷியோவை கொண்டுள்ளது. இணைப்பிற்கு, ஃபோன் இரட்டை சிம் ஆதரவு, புளூடூத் பதிப்பு 4.2, ஜிபிஎஸ் மற்றும் வைஃபை ஆதரவு ஆகியவற்றைப் பெறலாம்.

ஸ்பீட்  மற்றும் மல்டிடாஸ்கிங் , 12nm அடிப்படையிலான குவாட் கோர் யூனிசாக் டைகர் T310 மொபைல் ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், PowerVR GT7200 GPU கிராபிக்ஸுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. போனில் 4 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.

கேமராவைப் பற்றி பேசுகையில், போனின் பின்புற பேனலில் இரண்டு பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன, 13 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் 3 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா சென்சார் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 5 மெகாபிக்சல் முன் கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்ஸ் PH1 ஆனது 4700 mAh பேட்டரியை USB Type-C சார்ஜிங் போர்ட்டுடன் கொண்டுள்ளது. இந்த போன் வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கவில்லை என்பதும், பிங்கர்ப்ரின்ட் சென்சார் செக்யூட்டிக்கான இடத்தை இந்த போனில் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Philips PH1 Price

4 ஜிபி ரேம் / 32 ஜிபி ஸ்டோரேஜ்  4 ஜிபி ரேம் / 64 ஜிபி ஸ்டோரேஜ்  மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 4 ஜிபி ரேம் என இந்த பிலிப்ஸ் ஸ்மார்ட்போனின் மூன்று வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அடிப்படை மாறுபாட்டின் விலை RMB 499 (தோராயமாக ரூ. 5,910), 64 GB மாடலின் விலை RMB 569 (தோராயமாக ரூ. 6,740) மற்றும் மேல் மாறுபாட்டின் விலை RMB 769 (தோராயமாக ரூ. 9,110).ஆகும்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :