OPPO RENO இந்தியாவில் மே 28 அறிமுகமாகும் எப்போ எங்கே வாங்க பாக்கலாம்.

HIGHLIGHTS

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 28 ஆம் தேதி அறிமுகமாகும்

ரெனோ ஸ்டான்டர்டு எடிஷனில் 6.4 இன்ச் ஃபுல் HD . பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படுகிறது.

OPPO RENO இந்தியாவில் மே 28 அறிமுகமாகும் எப்போ  எங்கே வாங்க பாக்கலாம்.

ஒப்போ நிறுவனம் தனது ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய ரெனோ ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அதன் 10X லாஸ்-லெஸ் சூம் வசதி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.  ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 28 ஆம் தேதி அறிமுகமாகும் என ஒப்போ அறிவித்திருக்கிறது. ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் மற்றும் 10x லாஸ்-லெஸ் சூம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OPPO RENO STANDARD EDITION சிறப்பம்சம் 
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெனோ ஸ்டான்டர்டு எடிஷனில் 6.4 இன்ச் ஃபுல் HD . பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படுகிறது. இதன் 10x லாஸ்-லெஸ் சூம் வெர்ஷன் 6.6 இன்ச் ஃபுல் HDR  பிளஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

ஹை ரேஷியோ மாடலில் 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வித்தியாசமாக பாப்-அப் ஆகும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை பொருத்தவரை ரெனோ ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. 

இரண்டு ரெனோ போன்களிலும் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX286 பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதன் ஸ்டான்டர்டு எடிஷனில் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. 

இத்தனை சிறப்பம்சங்களை இயக்க ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனில் 3765 Mah. பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இ்ததுடன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo