Oppo Reno 6 Pro 5G மற்றும் Reno 6 இந்தியாவில் அறிமுகமானது இரண்டு 5G ஸ்மார்ட்போன்

Oppo Reno 6 Pro 5G மற்றும் Reno 6 இந்தியாவில் அறிமுகமானது இரண்டு 5G  ஸ்மார்ட்போன்
HIGHLIGHTS

ஒப்போ ரெனோ 6 5ஜி மற்றும் ரெனோ 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன

னோ 6 சீரிஸ் மாடல்கள் சீன சந்தையில் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டன.

ஒப்போ ரெனோ 6 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ் 11.3, இருக்கிறது

ஒப்போ ரெனோ 6 5ஜி மற்றும் ரெனோ 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களும் ஒப்போ நிறுவனத்தின் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். முன்னதாக ரெனோ 6 சீரிஸ் மாடல்கள் சீன சந்தையில் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டன. 

இவற்றில் இரு வேரியண்ட்கள் தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. ஒப்போ ரெனோ 6 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ் 11.3, 6.43 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடலில் 6.55 இன்ச் FHD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க ரெனோ 6 5ஜி மாடலில் உள்ள சென்சார்களுடன் கூடுதலாக 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரு மாடல்களிலும் 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, ஜி.பி.எஸ். மற்றும் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ 6 5ஜி மாடலில் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர்வூக் 2.0 பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர்வூக் 2.0 பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

Oppo Reno 6 Series 5G விலை தகவல்.

ஒப்போ ரெனோ 6 5ஜி விலை ரூ. 29,990 ஆகும். ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடல் விலை ரூ. 39,990 ஆகும். இரு மாடல்களும் ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், க்ரோமா, ஒப்போ வலைதளம் மற்றும் இதர விற்பனை மையங்களில் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo