Oppo R17 Pro ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஃபுல் HD . பிளஸ் டிஸ்ப்ளே உடன் அறிமுகம்

HIGHLIGHTS

புது ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD பிளஸ் 19:9 AMOLED டிஸ்ப்ளே, 91.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Oppo R17 Pro ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஃபுல் HD . பிளஸ்   டிஸ்ப்ளே உடன்  அறிமுகம்

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் R17  ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
புது ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD  பிளஸ் 19:9 AMOLED டிஸ்ப்ளே, 91.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட்  சென்சார் ஸ்மார்ட்போனினை 0.41 நொடிகளில் அன்லாக் செய்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கலர் OS  5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. AI செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் கொண்டுள்ளது. இத்துடன் 12 MP  பிரைமரி கேமரா, f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர், OIS, மற்றும் 20 MP  இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ R 17 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/2.4, OIS
– 20 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, TOF 3D கேமரா
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், 3D போர்டிரெயிட்
– இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3700 Mah . பேட்டரி

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3700 Mah . பேட்டரி, சூப்பர் VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் 0-40% சார்ஜ் செய்ய பத்து நிமிடங்களே எடுத்துக் கொள்ளும். அந்த வகையில் சார்ஜ் செய்த 40 நிமிடங்களில் ஸ்மார்ட்போன் 0-100% சார்ஜ் ஆகிவிடும்.

ஒப்போ R 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரேடியன்ட் மிஸ்ட் மற்றும் எமரால்டு கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.45,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அமேசான் வெப்சைட்டில் மட்டும் எக்ஸ்க்ளுசிவாக முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விற்பனை டிசம்பர் 7ம் தேதி ஆரம்பமாகிறது .

அறிமுக சலுகைகள்

– செலக்ட் செய்யப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தும் போது 10% கேஷ்பேக்
– பேடிஎம் மால் முன்பதிவு செய்வோருக்கு ரூ.3000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது
– ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,900 மதிப்புள்ள 3200 ஜி.பி. கூடுதல் டேட்டா
– ரூ.990 மதிப்புள்ள ஒரு முறை ஸ்கிரீன் மாற்றிக் கொள்ளும் வசதி
-நோ கோஸ்ட்   EMI  வசதி 
– பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.2000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo