Oppo K14 Lite
ஒப்போ இன்று இந்தியாவில் அதன் புதிய Oppo K14 Lite அறிமுகம் செய்தது இதன் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் ரேஞ்சில் கொண்டு வரப்பட்டது 7,000mAh பேட்டரி மற்றும் இந்த போனில் 6.75-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இந்த போன் குறைந்த பட்ஜெட் ரேஞ்சிலே அறிமுகம் செய்யப்பட்டது இதனுடன் இந்த போனை அறிமுகம் செய்த கையோடு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Oppo K14 Lite சிங்கிள் 4GB RAM + 64GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலை 16,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் பேங்க் ஆபராக இன்ஸ்டன்ட் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படும் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,15,999 க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை இன்று Oppo மற்றும் பிளிப்கார்டில் சேல் லைவ் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனை Feather Purple மற்றும் Stone Brown ஆகிய கலரில் வாங்கலாம்.
Oppo K14 Lite அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.75-inch HD+ (720 x 1,570 பிக்ஸல்) டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட் வழங்குகிறது உடன் இதில் 900 நித்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது. மேலும் இந்த போனின் பர்போமான்ஸ் பற்றி பேசினால் ஓப்போ K14 லைட், யூனிசாக் T7250 ஆக்டா-கோர் ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4GB LPDDR4X ரேம் மற்றும் 64GB UFS 2.2 சேமிப்பகம் உள்ளது. இது 13,700 சதுர மில்லிமீட்டர் வரையிலான வெப்ப கிராஃபைட் கூலிங் பகுதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் இதனுடன் இந்த போனில் Android 16 அடிபடையின் கீழ் கலர் OS16 யில் வேலை செய்கிறது.
இதையும் படிங்க MOTOROLA பிரியர்களுக்கு குட் நியூஸ் ஒரே அடியாக ரூ,20,799 வரை குறைப்பு
கேமராக்களைப் பொறுத்தவரை, ஓப்போ கே14 லைட்டில் ஆட்டோஃபோகஸ் வசதியுடன் கூடிய 13 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக , இதில் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது. இந்த கேமரா அமைப்பு போர்ட்ரெய்ட், நைட் மற்றும் டைம்-லேப்ஸ் முறைகளை ஆதரிக்கிறது. இந்த ஃபோனில் ஏஐ எரேசர், ஏஐ கிளியர் ஃபேஸ் மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 போன்ற ஏஐ அடிப்படையிலான அம்சங்களும் உள்ளன. மேலும் இது கூகுள் ஜெமினி மற்றும் கூகுளின் ஏஐ அசிஸ்டன்ட்டையும் சப்போர்ட் செய்கிறது .
ஓப்போ K14 லைட், தூசி மற்றும் நீர் தெறிப்புகளைத் தாங்கும் திறனுக்காக IP64 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இதில் 7,000mAh பேட்டரி உள்ளது, இதனுடன் இந்த போனில் 15W சார்ஜிங் சப்போர்துட மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது