Oppo வின் இரு ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது .

Oppo வின் இரு ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது .
HIGHLIGHTS

புதிய விலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது.

ஒப்போ எஃப்15 8 ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடல் விலை தற்சமயம் ரூ. 18990 முதல் துவங்குகிறது

தற்சமயம் ஒப்போ எஃப்15 8 ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடல் விலை தற்சமயம் ரூ. 18990 முதல் துவங்குகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 21990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒப்போ ரெனோ F2  ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 21990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய தகவல்களின் படி ஸ்மார்ட்போன்களின் புதிய விலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது.

ஒப்போ எஃப்15  சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மோனோகுரோம் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது.

இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் வூக் ஃபிளாஷ் சார்ஜ் வழங்கப்படுகிறது.

ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மோனோகுரோம் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது.

இத்துடன் 16 எம்பி பாப் அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் வூக் ஃபிளாஷ் சார்ஜ் 3.0 வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo