ஒப்போ நிறுவனம் அசத்தலான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது

ஒப்போ நிறுவனம் அசத்தலான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது
HIGHLIGHTS

கேலக்ஸி ஃபோல்டு மற்றும் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது.

கேலக்ஸி ஃபோல்டு மற்றும் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது.

ஒப்போ நிறுவன துணை தலைவர் ப்ரியான் ஷென் அந்நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை பார்க்க ஹூவாய் மேட் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன, இவற்றை திறக்கும் போது பெரிய திரை கொண்ட டேப்லெட் போன்று காட்சியளிக்கிறது.

ஸ்மார்ட்போனின் மத்தியில் சாதனத்தை மடிக்கக்கூடிய வகையில் கீல் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஒப்போவின் காப்புரிமையில் பாப்-அப் ரக கேமரா அமைப்பு வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. மடிக்கக்கூடிய வடிவமைப்பில் பெரிய டிஸ்ப்ளே கொண்ட போனினை பயன்படுத்த முடியும். 

ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலின் கீழ் ‘Designed by OPPO’ எனும் வாக்கியம் காணப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனினை ஒப்போ வடிவமைத்திருப்பது உறுதியாகி இருக்கிறது. 

இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை சுற்றி பெரிய பெசல் காணப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் சற்றே சிறிய ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமராக்கள், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படுகிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த அதிகளவு மாற்றங்களை கொண்டிருக்காது. பொதுமக்கள் ஆர்வத்திற்கு ஏற்ப இவ்வகை ஸ்மார்ட்போன்களை அதிகளவு உற்பத்தி செய்வது பற்றிய முடிவு எட்டப்படும் என ஒப்போ நிறுவன துணை தலைவர் தெரிவித்தார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo