OPPO ஸ்மார்ட்போனில் அதிரடி விலை குறைப்பு எந்த போனு பாத்துக்கங்க.

HIGHLIGHTS

இந்தியாவில் அறிமுகமான ஒரு மாதத்திற்குள் ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 4 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் அறிமுகமான நிலையில் ஒப்போ ஏ9 2020 4ஜி.பி. வேரியண்ட் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது

OPPO  ஸ்மார்ட்போனில் அதிரடி விலை குறைப்பு எந்த போனு பாத்துக்கங்க.

ஒப்போ நிறுவனத்தின் A9 2020 மற்றும் A5 2020 ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. சமீபத்தில் ஒப்போ A9 2020 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம் மாடல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலையில் ரூ. 500 நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி விலை குறைப்புக்கு பின் ஸ்மார்ட்போன் ரூ. 11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 12,490 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

3 ஜி.பி. ரேம் வேரியண்ட் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்போ ஏ5 2020 4 ஜி.பி. ரேம் விலையில் மாற்றம் செய்யப்படாமல் ரூ. 13,990 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போனின் புதிய விலை அமேசான் மற்றும் ஒப்போ அதிகாரப்பூர்வ விற்பனை வலைதளத்தில் மாற்றப்பட்டு விட்டது.

Oppo A9 2020 சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் நானோ வாட்டர் டிராப் ஸ்கிரீன்
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா
– 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்.பி. டெப்த் சென்சார்
– 2 எம்.பி. சென்சார்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா
– டால்பி அட்மோஸ்
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
– டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ரிவர்ஸ் சார்ஜிங் வசதி

இந்தியாவில் அறிமுகமான ஒரு மாதத்திற்குள் ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 4 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் அறிமுகமான நிலையில் ஒப்போ ஏ9 2020 4ஜி.பி. வேரியண்ட் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo