இந்தியாவில் ஒப்போவின் புதிய Oppo A77 ஸ்மார்ட்போன் 50MP கேமராவுடன் அறிமுகம்.

HIGHLIGHTS

OPPO தனது புதிய ஸ்மார்ட்போன் OPPO A77 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

Oppo A77 இன் சிறப்பம்சங்கள் பற்றி இங்கு விரிவாக கூறுகிறோம்.

ஒப்போ A77 மாடலில் 6.56 இன்ச் IPS LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

OPPO தனது புதிய ஸ்மார்ட்போன் OPPO A77 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனில் எச்டி+ டிஸ்ப்ளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் பெரிய பேட்டரி போன்ற பல சிறந்த சிறப்பம்சங்கள் உள்ளன. Oppo A77 இன் சிறப்பம்சங்கள் பற்றி இங்கு விரிவாக கூறுகிறோம்.

Oppo A77  சிறப்பம்சங்கள்.

ஒப்போ A77 மாடலில் 6.56 இன்ச் IPS LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓ.எஸ். 12.1 கொண்டிருக்கும் ஒப்போ A77 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 33 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2 MP மேக்ரோ / டெப்த் சென்சார், எல்இடி பிளாஷ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

பக்கவாட்டில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ A77 மாடலில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

Oppo A77 விலை தகவல்.

ஒப்போ A77 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெற முடியும்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :