இந்தியாவில் அதன் பட்ஜெட் செக்மாண்டில் இப்பொழுது ஒரு புதிய போனை OPPO A6c 4G போனை அறிமுகம் செய்தது, இதன் ஆரம்ப விலை ரூ,13,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் பெரிய 7000mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே மற்றும் IP64 ரேட்டிங் போன்ற அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, இந்நிறுவனம் ஹை பர்போமான்ஸ் கொண்ட டிஸ்ப்ளே மூலம் பயனர்களைக் குறிவைத்துள்ளது.
OPPO A6c 4G இந்தியாவில் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ₹13,999 ஆகவும், 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ₹16,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டோன் பிரவுன் மற்றும் ஃபெதர் ஒயிட் ஆகிய இரண்டு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த மாடலை OPPO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வாங்கலாம்.
ஸ்க்ரீன் : இந்த ஃபோனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்டுடன் கூடிய 6.76-இன்ச் HD+ LCD ஸ்க்ரீன் உள்ளது. இது மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் அனிமேஷன்களை உறுதி செய்கிறது. இந்த ஃபோன் IP64 ரேட்டிங் பெற்றிருப்பதால், இது டஸ்ட் மற்றும் வாட்டர் புகாத தன்மையைக் கொண்டுள்ளது. மேலும், நிறுவனம் 36 மாத கால ‘ஃப்ளூயன்சி ப்ரொடெக்ஷன்’ அம்சத்தையும் சேர்த்துள்ளது, இது நீண்ட காலத்திற்கு மென்மையான பர்போமான்ஸ் உறுதி செய்கிறது.
இதையும் படிங்க Oppo Find X9 Ultra vs Vivo X300 Ultra :சபாஸ் சரியான போட்டி இந்த இரு போனில் எது மாஸ்
பர்போமான்ஸ் : யூனிசாக் T7250 பர்போமான்ஸ் இயக்கப்படும் இது, LPDDR4X ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது அன்றாடப் பயன்பாட்டையும் மேம்படுத்துகிறது.
கேமரா: போட்டோ எடுப்பதற்காக, OPPO A6c 4G மாடலில் 13MP பின்புற கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக் 5MP முன்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் பெரிய 7000mAh பேட்டரி ஆகும். நிறுவனம் 15W சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டை வழங்கியுள்ளது இந்த போன் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியையும் வழங்குகிறது.