Oppo A5S ஒரு ரூ.9,990 விலையில் இந்தியாவில் அறிமுகம்.

HIGHLIGHTS

ஒப்போ A5S ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, கிரீன் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.9,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Oppo A5S  ஒரு ரூ.9,990 விலையில்  இந்தியாவில் அறிமுகம்.

ஒப்போ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ A5S  என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD  பிளஸ் 1520×720 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 ஆக்டா-கோர் சிப்செட், IMG GE8320 GPU, 2 ஜி.பி. / 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஒப்போ A5S  சிறப்பம்சங்கள்:

– 6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
– IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 8.1
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– டூயல் சிம் ஸ்லாட்
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4230 mah  பேட்டரி
மெமரியை பொருத்தவரை 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, f/2.2 + f/2.4, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஓ.எஸ். 8.1 மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. 

ஒப்போ A5S ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, கிரீன் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.9,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் கிரீன் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் விற்பனை அடுத்த மாதம் முதல் துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile