Oppo A52 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் உடன் அறிமுகம்
Oppo A52 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது
Oppo A52 ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது
ஒப்போ நிறுவனத்தின் Oppo A52 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
SurveyOppo A52 சிறப்பம்சங்கள்:
– 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 6 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– கலர்ஒஎஸ் 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி கேமரா 4cm மேக்ரோ, 1.75μm பிக்சல், f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப்-சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் சார்ஜிங்
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் கலர்ஒஎஸ் 7.1 கொண்டிருக்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை
ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் டுவிலைட் பிளாக் மற்றும் ஸ்டீம் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile