விரைவில் இந்தியா வரும் ஒப்போ A3s ஸ்மார்ட்போன…!

HIGHLIGHTS

Oppo A3S ஸ்மார்ட்போன் முந்தைய சாதனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவனம் தொடங்கப்பட்டது, இந்த சாதனம் Oppo A3 அறிமுகப்படுத்தப்பட்டது.

விரைவில் இந்தியா வரும்  ஒப்போ A3s ஸ்மார்ட்போன…!

Oppo A3S ஸ்மார்ட்போன் முந்தைய சாதனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவனம் தொடங்கப்பட்டது, இந்த சாதனம் Oppo A3 அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இப்பொழுது ஒப்போ நிறுவனத்தின் A3s ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு வித வேரியன்ட்களில் வெளியிடப்பட இருக்கும் ஒப்போ A3s ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இத்துடன் அழகிய செல்ஃபிக்களை எடுக்க ஒப்போவின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் 2.0 வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஒப்போ A3 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய A3s வெளியிடப்பட இருக்கிறது. சீனாவில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட A3 ஸ்மார்ட்போனில் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ பெசல்-லெஸ் டிஸ்ப்ளே மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ A3s சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1520 பிக்சல் சூப்பர் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
– 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, AI பியூட்டி தொழில்நுட்பம் 2.0
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4230 எம்ஏஹெச் பேட்டரி

இந்தியாவில் ஒப்போ A3s 2 ஜிபி மாடலின் விலை ரூ.10,990 முதல் துவங்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் டார்க் பர்ப்பிள் என இரண்டு வித நிறங்களில் வெளியிடப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile