இந்தியாவில் OPPO A11K அறிமுகம், விலை தகவலை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் OPPO A11K அறிமுகம், விலை தகவலை  இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
HIGHLIGHTS

Oppo ஒப்போ A11K என்ற புதிய பட்ஜெட் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

டிஸ்பிளேக்கு மேல் ஒரு வாட்டர் டிராப் நோட்ச் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதன் விலை ரூ. 8990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் Oppo ஒப்போ A11K  என்ற புதிய பட்ஜெட் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .8,990. ஸ்மார்ட்போன் டீப் ப்ளூ ஆர் பிளையிங் சில்வர் கலரில் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. போனின் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன, மேலும் டிஸ்பிளேக்கு மேல் ஒரு வாட்டர் டிராப் நோட்ச் வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 3 டி ஃப்ளோயிங் பிளேஸ் டிசைனும், பின்புற பேனலில் மேட் ஃபினிஷும் இருப்பதாக ஒப்போ கூறுகிறது.

OPPO A11K  சிறப்பம்சங்கள்:

6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
IMG PowerVR GE8320 GPU
2 ஜிபி ரேம்
32 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒஎஸ் 6.1
13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
2 எம்பி இரண்டாவது கேமரா, f/2.4
5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
டூயல் சிம்
கைரேகை சென்சார்
3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
4230Mah  பேட்டரி

 புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 2ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர்ஒஎஸ் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 4230 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

விலை தகவல்.

ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் ஃபுளோவிங் சில்வர் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo