50MP கேமரா OxygenOS 12 உடன் OnePlus 9RT இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்

HIGHLIGHTS

அடுத்த ஒன்பிளஸ் மாடலின் பெயர் மற்றும் அம்சங்கள் வெளியானது

OnePlus 9RT. ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே அறிமுகமாகி இருக்கும் ஒன்பிளஸ் 9ஆர் மாடலில் இருந்ததை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது

50MP  கேமரா OxygenOS 12 உடன் OnePlus 9RT  இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 9ஆர்.டி. ஸ்மார்ட்போன் விவரங்கள், இணையத்தில் வெளியானது முதல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், OnePlus 9RT. ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகமாகி இருக்கும் ஒன்பிளஸ் 9ஆர் மாடலில் இருந்ததை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9ஆர்.டி. மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு சீரிசில் மேலும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நார்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒன்பிளஸ் 9ஆர்.டி. மாடல்கள் ஒரே சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஹார்டவெர் அம்சங்களைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் 9 ஆர்டி ஆனது ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போனின் அடித்தளமாகவே இருக்கும், அதாவது இது அதே 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 870 SoC ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

புதிய ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகும் என்றும் இது முந்தைய ஒன்பிளஸ் 9ஆர் போன்றே இந்தியா மற்றும் சீன சந்தைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile