OnePlus Nord இன்று பகல் 2 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது. நிறுவனம் சமீபத்தில் இந்த போனை அறிமுகப்படுத்தியது. ஒன்பிளஸின் இந்த சமீபத்திய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ .24,999 உடன் வருகிறது. போனில் வலுவான ஸ்னாப்டிராகன் ப்ரோசெசர், 90 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதம் மற்றும் பல சிறந்த அம்சங்கள் உள்ளன.
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் புளூ மார்பிள் மற்றும் கிரே ஆனிக்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ICICI வங்கி கிரெடிட் கார்டுடன் வாங்குவதன் மூலம் அமேசான் இந்தியாவில் ரூ .1,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.
ONEPLUS NORD சிறப்பம்சங்கள்
- 6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 408 ppi 20:9 ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
- அட்ரினோ 620 GPU
- 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- 12 ஜிபி ரேம், 256 ஜிபி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.75, OIS + EIS
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.25
- 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
- 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, f/2.45
- இன் டிஸ்பஅளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி, சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப்-சி
- 4115 எம்ஏஹெச் பேட்டரி
- ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்பி இன்-ஸ்கிரீன் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், எக்ஸ்51 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4115 எம்ஏஹெச் பேட்டரி, ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது
Price: |
![]() |
Release Date: | 21 Jul 2020 |
Variant: | 64GB6GBRAM , 128GB8GBRAM , 256GB12GBRAM |
Market Status: | Launched |