Dimensity 810 SoC உடன் OnePlus Nord N300 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.

Dimensity 810 SoC  உடன் OnePlus Nord N300 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.
HIGHLIGHTS

OnePlus Nord N300 5G ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இது ஸ்மார்ட்போன் சந்தையில் அக்டோபர் 24 அன்று மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது

இது 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. இது Nord N200 5G இன் வாரிசு ஆகும்.

கடந்த பல வாரங்களாக விவாதத்தில் இருந்த OnePlus Nord N300 5G ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பரில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது, ஆனால் இது ஸ்மார்ட்போன் சந்தையில் அக்டோபர் 24 அன்று மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. இது Nord சீரிஸ்யின் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இது 90Hz ரிபெரேஸ் ரேட் உடன் 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிவைஸில் MediaTek Dimensity 810 SoC பொருத்தப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக கம்பெனி உறுதிப்படுத்தியபடி, இது 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. இது Nord N200 5G இன் வாரிசு ஆகும். 

OnePlus Nord N300 5G கிடைக்கும்

OnePlus Nord N300 5G ஆனது ஒரு 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது. மிட்நைட் ஜேட் நிறத்தில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை $ 228 (சுமார் 19 ஆயிரம் ரூபாய்) முதல் தொடங்குகிறது. இந்த போனின் விற்பனை அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி முதல் அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும். T-Mobile மற்றும் Metro ரீடைலாஸ் விற்பனையாளர்கள் மூலம் இதை வாங்கலாம். மற்ற ஸ்மார்ட்போன் சந்தைகளுக்கான அதன் விலையை கம்பெனி வெளியிடவில்லை. 

OnePlus Nord N300 5G முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள்

OnePlus Nord N300 5G ஆனது 90Hz ரிபெரேஸ் ரேட் உடன் 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைல் ​​டிசைன் கொண்டுள்ளது. முன்பக்க கேமரா நாட்ச்சில் தானே பொருத்தப்பட்டுள்ளது. போன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை நீட்டிக்க முடியும். ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல்கள் கொண்ட பிரைமரி லென்ஸுடன் டூவல் பேக் கேமரா உள்ளது. இதனுடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இது நைட்ஸ்கேப் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடன் வருகிறது. கம்பெனியின் கூற்றுப்படி, குறைந்த வெளிச்சத்திலும் போனில் சிறந்த படங்களை எடுக்க முடியும். 

OnePlus Nord N300 5G இல், கம்பெனி 5000 mAh பேட்டரி பேக்கை வழங்கியுள்ளது. இதில் 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 இல் துவங்கும் மற்றும் ஆக்சிஜன்ஓஎஸ் 13 உடன் வருகிறது. கனெக்ட்டிவிட்டிற்காக, போன் n2, n25, n41, n66, n71 மற்றும் n77 5G பேண்டுகளை சப்போர்ட் செய்யும் என்று கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo