OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போன் 12GB ரேம், மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம்.

HIGHLIGHTS

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நாட்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகி உள்ளது

ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடலில் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம், 6.43 இன்ச் புல் ஹெச்.டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 5ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நாட்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகி உள்ளது. ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 1) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 5ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

OnePlus Nord 2T 5G சிறப்பம்சம்

ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடலில் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம், 6.43 இன்ச் புல் ஹெச்.டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், 4500 mAh பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது. 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

கேமராவாக, இது f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா மற்றும் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 2 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் f/2.4 அப்ரட்ஜர்  கொண்ட 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு இயக்க முறைமையாக, இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 12.1 இல் வேலை செய்கிறது.

OnePlus Nord 2T 5G விலை தகவல்.

இதன் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.28 ஆயிரத்து 999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.33 ஆயிரத்து 999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :