OnePlus N6 Lite 5G
OnePlus இந்தியாவில் அதன் OnePlus N6 சீரிஸ் புதிய போனை கொண்டு வர இருக்கிறது, மேலும் இது ஏற்கனவே OnePlus N6 மற்றும் OnePlus N6x போனை அறிமுகம் செய்துள்ளது. இப்பொழுது இந்த சீரிஸ் கீழ் மேலும் புதிய போனை அறிமுகம் செய்தவதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த புதிய போனின் கீழ் OnePlus N6 Lite 5G போனின் அறிமுகத்தை பற்றி அமேசான் வெப்சைட்டில் மைக்ரோ சைட்டில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது
ஒன்பிளஸ் நிறுவனம் தனது வரவிருக்கும் போனை பற்றி அமேசான் மைக்ரோ சைட்டில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . இந்த போனுக்காக ஒரு பிரத்யேக சிறுபக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் லிஸ்ட்டின்படி, இந்த போன இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். அந்நிறுவனம் அதனுடன் ‘Coming Soon ‘ என்ற குறிப்பைப் பயன்படுத்தியுள்ளது. இருப்பினும், கைபேசியின் வெளியீட்டுத் தேதி அந்தப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற 5ஜி ஸ்மார்ட்போனை ₹18,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இந்த போன் 720 x 1570 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.8-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போனின் டிஸ்ப்ளே 900 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது மற்றும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது . நிறுவனம் இந்த போனின் பாடியில் ராணுவத் தரத்திலான MIL-STD-810H நீடித்துழைக்கும் தன்மையை வழங்கியுள்ளது. இந்த போன் 7000mAh பேட்டரி மற்றும் 15W USB டைப் C சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ்-இல் இயங்குகிறது. மேலும், இதில் 13MP பிரதான கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமராவும் உள்ளது.
இதையும் படிங்க:7200mAh பேட்டரியுடன் சத்தமில்லாமல் புதிய போனை அறிமுகம் செய்த iQOO விலை அம்சங்கள் பாருங்க
வரவிருக்கும் OnePlus இந்த போனில் தட்டையான ஸ்க்ரீன் (flat display panel) அதன் டீசரில் (teaser) காணப்படுகிறது. ‘OnePlus N6 Lite’ குறித்த லீக் தகவல்களைத் தொடர்ந்து, இந்த போன Amazon-இல் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் 4GB RAM உடன் அறிமுகப்படுத்தப்படலாம்; மேலும், இதுவே இதுவரை வெளியான OnePlus போன்களிலே மிகவும் விலையான விலையிலான மாடலாக இருக்கக்கூடும்.