புதிய நிறத்தில் உருவாகும் Oneplus 8 சீரிஸ்.

HIGHLIGHTS

புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் டீசரை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ வெளியிட்டிருக்கிறார்.

புதிய நிறத்தில் உருவாகும் Oneplus 8 சீரிஸ்.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டுக்கு சில தினங்களுக்கு முன் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் டீசரை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ வெளியிட்டிருக்கிறார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பச்சை நிறத்தில் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். முந்தைய ஒன்பிளஸ் 7டி சீரிஸ் ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட்டெட் சில்வர் மற்றும் கிளேசியர் புளூ நிறங்களில் வெளியிடப்பட்டது.டீசர்களின் படி ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ அல்லது இரு மாடல்களும் பச்சை நிறத்தில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது

கடந்த வாரம் பீட் லௌ ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். புகைப்படங்கள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டு இருந்ததோடு, கேமராவின் அல்ட்ரா வைடு ஆங்கில் அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

பீட் லௌ வெளியிட்ட டீசரில் ஸ்மார்ட்போனின் பின்புறம் பச்சை நிறத்தில் ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பொருத்தப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. இதில் ஒன்பிளஸ் லோகோ கீழ்புறமாக காணப்படுகிறது. டீசரில் இருப்பது ஒன்பிளஸ் 8 அல்லது ஒன்பிளஸ் 8 ப்ரோ என்பதை பீட் லௌ குறிப்பிடவில்லை.

ஏற்கனவே ஒன்பிளஸ் வெளியிட்ட தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ராப் சார்ஜ் 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. விலையை பொருத்தவரை ஒன்பிளஸ் 8 ப்ரோ 919 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 76,900 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo