OnePluo s 8 Pro அறிமுகத்திற்கு முன்பே லீக் தகவல், 5G அம்சம் கொண்டது.

OnePluo s 8 Pro  அறிமுகத்திற்கு  முன்பே  லீக் தகவல், 5G அம்சம் கொண்டது.
HIGHLIGHTS

ன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் ஆப்ஷன் ஸ்கிரீன்ஷாட் வலைதளத்தில் வலம் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் HD2023 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.

OnePluo 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என ஒன்பிளஸ் சமீபத்தில் அறிவித்தது. எனினும், புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி எவ்வித தகவலும் வெளியாகவில்லை. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

புதிய தகவல்களின் படி ஒன்பிளஸ் இம்முறை மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என கூறப்படுகிறது. இவற்றில் ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் ஆப்ஷன் ஸ்கிரீன்ஷாட் வலைதளத்தில் வலம் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் HD2023 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865, அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் UFS 3.0 அல்லது UFS 3.1 ஸ்டோரேஜ் மாட்யூல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். வழங்கப்படுகிறது.

பெயருக்கு ஏற்றார்போல் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் இதில் QHD+ ரெசல்யூஷன் கொண்ட 6.65 இன்ச் ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களின் படி பாப் அப் ரக செல்ஃபி கேமராவுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க புதிய ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா, 20 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் IP தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo