ONEPLUS 7 PRO மொபைல்போன் முன்பதிவு அமேசான் இந்தியாவில் ஆரம்பம் ஆஃப்லைனில் மே 8 புக் செய்யலாம்.
OnePlus 7 மற்றும் OnePlus 7 Pro மொபைல்போன் மே 14 அறிமுகவதற்க்கு முன்பு 15,000 ரூபாயின் விலையில் கொண்ட ஸ்க்ரீன் ரீப்ளேஸ்மென்ட் உடன் முன் பதிவுக்கு அமேசான் இந்தியாவில் வாங்கி செல்லலாம். இந்த மொபைல் போன் அமேசான் இந்தியாவிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை 12:00 மணிக்கு அமேசான் இந்தியாவில் முன்பதிவு செய்வதற்காக OnePlus 7 Pro மொபைல் போன் வந்துள்ளது. இது அமேசான் சம்மர் சேல் விற்பனை முன்னோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இது அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் மட்டுமே. இருப்பினும், மற்ற பயனர்கள், இந்த மொபைல் போனை இன்று , அதாவது மே 4-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும் என்று சொல்லலாம். இது கோடைக்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
Surveyபுதிய ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வதற்கென அமேசான் இந்தியா தளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் திறக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோர் மே 3 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதிக்குள் ரூ.1000 மதிப்புள்ள கிஃப்ட் கார்டு ஒன்றை வாங்க வேண்டும்.
இவ்வாறு வாங்கும் போது உங்களுக்கான கிஃப்ட் கார்டு பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இனி விற்பனை துவங்கிய 60 மணி நேரத்திற்குள் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். ஸ்மார்ட்போனை வாங்கும் போது கிஃப்ட் கார்டு தொகை ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து குறைக்கப்படும்.
வெற்றிகரமாக பணம் செலுத்தியதும் ரூ.15,000 மதிப்புள்ள ஸ்கிரீன் ரீபிலேஸ்மென்ட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு ஸ்மார்ட்போன் வாங்கியதில் இருந்து முதல் ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாகும்.
ஒன்பிளஸ் 7 சீரிஸ் அறிமுக விழா மே 14 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு துவங்குகிறது.
மே 8 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் ஒன்பிளஸ் ஸ்டோர், க்ரோமா அல்லது ரிலையன்ஸ் ஸ்டோர்களுக்கு நேரடியாக சென்று ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு முன்பதிவு செய்வோருக்கும் ஸ்கிரீன் ரீபிலேஸ்மென்ட் வசதி வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile