Oneplus 7 ப்ரோ தகவல் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது..!~

Oneplus  7 ப்ரோ  தகவல்  இன்டர்நெட்டில்  லீக் ஆகியுள்ளது..!~
HIGHLIGHTS

ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுவது உறுதியாகி இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 7 இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுவது உறுதியாகி இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது. 

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலேயே மிகப்பெரிய டிஸ்ப்ளேவாகும். இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்த நிலையில், ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் முற்றிலும் பெசல் இல்லாத டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. இது ஸ்மார்ட்போனிற்கு பிரீமியம் ஃபிளாக்‌ஷிப் தோற்றத்தை வழங்குகிறது.

இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 4 ஜி எல்.டி.இ., வோல்ட்இ வசதி, ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். இயங்குதளம் வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று பிரைமரி கேமரா கொண்டு அறிமுகமாகும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 7 ப்ரோ இருக்கும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo