Oneplus 6 T புதிய இரண்டு நிறங்களில் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது…!

HIGHLIGHTS

ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் இரண்டு புதிய நிறங்களை கொண்டிருப்பது சமீபத்தில் லீக் ஆகியிருக்கும் போட்டோக்களில் தெரியவந்துள்ளது.

Oneplus 6 T புதிய இரண்டு நிறங்களில் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது…!

ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் இரண்டு புதிய நிறங்களை கொண்டிருப்பது சமீபத்தில் லீக் ஆகியிருக்கும் போட்டோக்களில் தெரியவந்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இம்முறை லீக் ஆகியிருக்கும் போட்டோக்களின் படி ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பிளாக்-மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் என இரண்டு நிறங்களை கொண்டிருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் மென்மையான கிளாஸ் பிளாக் பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் பிங்காரப்ரின்ட் சென்சார் காணப்படவில்லை.

இது ஏற்கனவே வெளியான இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரிண்ட் சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. லீக் ஆகியிருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் 6டி மாடலில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் கொண்டிருக்கிறது.

முன்னதாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் முதல்முறையாக நாட்ச் டிஸ்ப்ளே வழங்கி இருந்தது. அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 6டி மாடலில் புதிய வகை நாட்ச் வழங்க இருக்கிறது.

ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படும் என்றும், முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6T  ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது. 

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340×1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட AI . அம்சங்கள் வழங்கப்படலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile