OnePlus 6 யின் அதிகாரபூர்வமாக கேமரா சாம்பிள் உடன் டீசர் வெளியாகியது

HIGHLIGHTS

OnePlus யின் CEO Pete Lau லான்ச் ஆவதற்க்கு முன்பே சில கேமரா சாம்பிள் போஸ்ட் வெளியாகியது

OnePlus 6 யின் அதிகாரபூர்வமாக கேமரா சாம்பிள் உடன் டீசர் வெளியாகியது
OnePlus அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக வரவிருக்கும் OnePlus 6 ஸ்மார்ட்போனை டீஸ் செய்கிறது. சமீபத்தில் நிறுவனம் சமூக மீடியாவில் ஸ்மார்ட்போனின் ஒரு படத்தை வெளியிட்டது, இது அதன் பின் குழுவை வெளிப்படுத்துகிறது. படம் OnePlus 6 ஐபோன் எக்ஸ் போன்ற டிஸ்பிளே இருக்கும் என்று காட்டுகிறது. OnePlusCEO Pete Lau  OnePlus சில கேமரா சாம்பிள் வெளியிடப்பட்டது.OnePlus 6 சில கேமரா ஷார்ப்ளஸ் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!
அந்த வகையில் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய டீசரில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.

இத்துடன் இடம்பெற்றிருக்கும் மூன்று நொடிகள் ஓடக்கூடிய வீடியோவில் மழைத்துளிகள் மட்டும் காணப்படுகிறது. இதன் ட்வீட் தலைப்பில் மழையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த முடியாமல் போவது உங்களுக்கு கவலையளிக்குமா? எங்களுக்கும் அப்படித்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ட்வீட் மற்றும் சிறிய வீடியோ ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட இருப்பதை உறுதி செய்வதாக அமைந்துல்ளது. இந்த அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி பெறும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 6 இருக்கும். 

வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி போன்றே புதிய ஸ்மார்ட்போனில் நாட்ச் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. மேலும் டூயல் கேமரா டிசைன் , பின்புற பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.। 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo