GOOGLE PIXEL 4 டூயல் பின் கேமராவுடன் வரும் மேலும் பல தகவலை பக்க்கலாம் வாங்க.

GOOGLE PIXEL 4  டூயல் பின் கேமராவுடன் வரும்  மேலும் பல தகவலை பக்க்கலாம் வாங்க.

Google Pixel 4 இன்னும் அறிமுகம்  செய்வதற்க்கு  சுமார்  3-4 மாதங்கள் மாதங்கள்  இருக்கிறது, அப்படி இருப்பினும்  அதற்க்கு  முன்னரே  அதை பற்றிய தகவலை கூகுள்  தகவல் வெளியியிட்டுள்ளது, மேலும் இந்த  சீரிஸ்   Pixel 4 என்ற வடிவில் வரும் மற்றும் இதன் பின்புறத்தில் இரட்டை பின் கேமராவுடன்  வரும்.

பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், தற்சமயம் அதிகாரப்பூர்வ டீசர் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் பின்புறம் சதுரங்க வடிவில் கேமரா பம்ப் காணப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களில் கூடுதல் லென்ஸ்களை வழங்கும் பாணியை தவிர்த்து வந்த கூகுள் தற்சமயம் பிக்சல் 4 சாதனத்தில் மாற்றிக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. டீசரின் படி கூகுள் தனது புதிய ஸ்மார்ட்போனில் குறைந்தபட்சம் இரண்டு லென்ஸ்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் LED . ஃபிளாஷ் யூனிட் ஒன்றும் வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும், கேமரா ரெசல்யூஷன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இது டெலிபோட்டோ லென்ஸ் அல்லது அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்களி்ல் எதுவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. 

 

முன்னதாக இதேபோன்ற சதுரங்க கேமரா பம்ப் கொண்ட டிசைன் ஐபோன் XI மாடலில் வழங்கப்படலாம் என்ற வாக்கில் இணையத்தில் தகவல்கள் வெளியாகின.

ஸ்மார்ட்போனின் முன்புறம் நாட்ச் வடிவமைப்பை நீக்கி கேலக்ஸி எஸ்10 பிளஸ் போன்று பன்ச் ஹோல் கேமரா வழங்கலாம் என்றும் முன்புறமும் இரட்டை செல்ஃபி கேமராக்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும்.

வடிவமைப்பை பொருத்தவரை கூகுள் டு-டோன் பேக் ஃபினிஷிற்கு மாற்றாக புதிதாக ஆல்-கிளாஸ் பேக் வடிவமைப்பை வழங்கலாம் என தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை. இதனால் பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

இருப்பினும் , இதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய ஸ்மார்ட்போன் வெளியாகும் போது ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo