நோக்கியாவின் கேமிங் போன் விரைவில் அறிமுகமாகும்…!

நோக்கியாவின்  கேமிங் போன் விரைவில் அறிமுகமாகும்…!
HIGHLIGHTS

நோக்கியா நிறுவனம் விரைவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது

HMD . குளோபல் நிறுவனம் பல்வேறு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெவ்வேறு விலையில் அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் நோக்கியா 8 சிரோக்கோ மற்றும் நோக்கியா 1 ஸ்மார்ட்போன்களை அதிக விலையில் ஒன்றையும், குறைந்த விலையில் ஒன்றையும் அறிமுகம் செய்தது.

அந்த வகையில் நோக்கியா நிறுவனம் விரைவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹானர், அசுஸ், சியோமி, ரேசர் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே கேமிங் ஸ்மார்ட்போனினை இதுவரை அறிமுகம் செய்துள்ளன. அந்த வரிசையில் விரைவில் நோக்கியாவும் சேரும் என தெரிகிறது.

புதிய கேமிங் ஸ்மார்ட்போனிற்கென சிறிய வீடியோ ஒன்றை நோக்கியா மொபைல் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும் ட்விட் உடன் #GameOn என்ற ஹேஷ்டேக் கொடுக்கப்பற்றி இருந்தது..

மற்ற கேமிங் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது நோக்கியா மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட், 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் மற்றும் கேமிங் சார்ந்த உதிரிபாகங்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படலாம்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி HMD குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 7 பிளஸ் மாடலில் காம்பேக்ட் நாட்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் போன்றவை வழங்கப்படலாம் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo