நோக்கியாவின் விலை உயர்ந்துள்ளது, காரணம் இது தான்.

நோக்கியாவின் விலை உயர்ந்துள்ளது, காரணம் இது தான்.

இந்தியாவில் மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 இல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை உயர்வின் படி நோக்கியா 2.3 விலை ரூ. 7585 என்றும், நோக்கியா 110 விலை ரூ. 1684 என்றும், நோக்கியா 6.2 ரூ. 13168 என்றும் நோக்கியா 7.2 ரூ.16330 என மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 மாடல்களின் விலை சமீபத்தில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நோக்கியா 2.3, நோக்கியா 110, நோக்கியா 6.2, நோக்கியா 7.2, நோக்கியா 105, நோக்கியா 2.2, நோக்கியா 4.2, நோக்கியா 3.2 மக்கும் நோக்கியா 9 பியூர் வியூ உள்ளிட்ட மாடல்களின் விலை உயர்த்தப்படுகிறது. 

நோக்கியா 9 பியூர்வியூ மாடல் ரூ. 2678 விலை உயர்த்தப்பட்டு ரூ. 52,677 என மாற்றப்பட்டுள்ளது.நோக்கியா 105, நோக்கியா 2.2, நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 மாடல்கள் முறையே ரூ. 1053, ரூ. 6320, ரூ. 10008 மற்றும் ரூ. 8428 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo