NOKIA 9.3 PUREVIEW யில் கிடைக்கும் 120HZ டிஸ்பிளே மற்றும் 108MP கேமரா.
அதிக ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, மற்றும் அதிக ரெசல்யூஷன் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
Surveyதற்போதைய ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 120 ஹெர்ட்ஸ் வரையிலான டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய நோக்கியா 9.3 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் அதிக ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, மற்றும் அதிக ரெசல்யூஷன் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதனால் நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இதில் எல்சிடி பேனல் வழங்கப்படுமா அல்லது OLED பேனல் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. மேலும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6.29 இன்ச் QHD+ P-OLED டிஸ்ப்ளே, 2கே ரெசல்யூஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, 4500 எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி போர்ட், 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது அதிகபட்சமாக 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதில் சாம்சங்கின் 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 64 எம்பி, 24 எம்பி, 20 எம்பி மற்றும் 48 எம்பி சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியீடு சிலமுறை மாற்றம் செய்யப்பட்டு விட்டது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile